முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கும் பணி தொடங்கியது

Suresh| Last Modified வியாழன், 17 ஜூலை 2014 (15:22 IST)
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர் தேக்கும் பணிகள் இன்று தொடங்கின, இதனால் 13 மதகுகள் அடைக்கப்பட்டன.

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி இன்று காலை தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், அணையில் உள்ள 13 மதகுகளின் கதவுகளை அடைத்தனர்.

இந்த மதகுகளின் வழியேதான் நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இவை அடைக்கப்பட்டு அணையில் நீர்மட்டம் 142 அடிக்கு தேக்கிவைக்கப்பட உள்ளது.

இதையடுத்து, 17.07.2014 காலை 13 மதகு கதவுகள் அடைக்கப்பட்டு, 142 அடிக்கு நீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது.


இதில் மேலும் படிக்கவும் :