1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2015 (10:42 IST)

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு புதிய அணைதான் ஒரே தீர்வு: உம்மன் சாண்டி

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்றும் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்துவேம் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.


 
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அமைச்சர்வைக் கூட்டத்தல் விவாதிக்கப்பட்டது.
 
பின்னர் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துடனான ஒப்பந்தம் 9,99 ஆண்டுகளுக்கானது ஆகும்.
 
ஆனால், நூறாண்டுகள் பழமையான தற்போதைய அணை, அத்தனை ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா?
 
இன்றோ அல்லது நாளையோ, புதிய அணை வருவது அவசியம். அந்த புதிய அணை, இன்றே வரட்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
 
புதிய அணை கட்டுவதுதான், இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
 
பொதுவாக, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் ஒப்பந்தம் எல்லாம், தண்ணீரின் அளவு பற்றியதாகவோ அல்லது உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது பற்றியதாகவோ தான் இருக்கும்.
 
ஆனால், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை மட்டும்தான், மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக உள்ளது.
 
நாங்கள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கூறவில்லை. கேரள மக்களின் பாதுகாப்பு கருதியே எங்கள் வாதத்தை முன்வைக்கிறோம்.
 
"தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு" என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. புதிய அணை கட்டுவதன்மூலம், இந்த இலக்கை அடையலாம்.
 
இதற்கு மத்திய அரசு அனுமதி தந்தால் போதும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நிர்வாகரீதியிலான, சட்டரீதியிலான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.