வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2015 (10:42 IST)

வெடிவிபத்து : தனி நபர் விசாரணைக் கமிஷனை அமைத்தது மத்தியபிரதேசம்

மத்தியப்பிரதேசத்தில் 90 பேர் உயிரிழந்த வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள தனி நபர் விசாரணைக் கமிஷனை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
 
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்லவாட்  பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர கசாவா. இவருக்கு சொந்தமான  அடுக்குமாடி கட்டிடத்தில் பாறைகள் நிறைந்த பகுதிகளில் கிணறு வெட்ட பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்தன. இதனால் அருகில் இருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வெடித்தன.இந்த விபத்த்தில் அந்தக் கட்டிடம் முழுவதும் அடியோடு சரிந்து விழுந்தது.


 
 
வெடிவிபத்து நிகழ்ந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால் இச்சம்பவத்தில் 90 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை மாநில முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


 
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அர்யேந்திரா குமார் சக்ஸேனா தலைமையில் தனி நபர் விசாரணைக் கமிஷனை மத்தியப்பிரதேச அரசு அமைக்கப்பட்டுள்ளது.
 
சக்ஸேனா தலைமையிலான இந்த விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை நவம்பர் மாத இறுதிக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.