நடிகை கற்பழிப்பு : இயக்குனர் கைது


Murugan| Last Updated: செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (11:28 IST)
நடிகையை கற்பழித்த வழக்கில் சினிமா இயக்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். 

 

 
போஜ்புரி மொழிகளில் சினிமா படங்கள் இயக்கியவர் ஷியாம் சரன் யாதவ். இவர் மீது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி மற்றும் நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் ஒன்றை மும்பை காவல் நிலையத்தில் கொடுத்தார்.
 
அந்த புகார் மனுவில் “நான் இயக்குனர் ஷியான் சரனை 2012ஆம் ஆண்டு ஒரு சினிமா நிகழ்ச்சியில் சந்தித்தேன். இருருவம் எங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். அதன்பின் தொலைபேசி, பேஸ்புக், வாட்ஸப் என்று அவரிடம் நட்புடன் இருந்தேன்.
 
இந்தியா வரும்போதெல்லாம் அவரை சந்தித்து பேசினேன். இருவரும் சேர்ந்து எய்ட்ஸ் நோய் சம்பந்தமாக ஒரு டாக்குமெண்டரி படம் ஒன்றையும் தயாரித்தோம். அதில் நானே நடித்தேன். அதன்பின் அவர் ஒரு இந்தி படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதற்கு பண உதவி செய்யும் படி என்னை கேட்டார்.
 
நான் அவருக்கு ரூ.36 லட்சம் வட்டியில்லா கடன் கொடுத்தேன். நாளைடைவில் அவர் ஒரு மோசடி பேர்வழி என்று தெரிந்து கொண்டேன். அதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் என்னை மிரட்டினார்.
 
மேலும், அவரும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து என்னை கடத்திச் சென்றனர். அங்கு ஷ்யாம் சரன் என்னை கற்பழித்தார். அதை தனது கேமராவில் படம் பிடித்தார். நான் பணத்தை கேட்டால், அந்த படத்தை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று என்னை மிரட்டுகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷியாம் சரனை கைது செய்தார்கள். மேலும் தப்பி ஓடிய அவரது இரண்டு உதவியாளர்களை தேடி வருகிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :