ஒருவருடன் திருமணம்; வேறு ஒருவருடன் உல்லாசம் : மகளை கொன்ற தாய்


Murugan| Last Modified திங்கள், 14 மார்ச் 2016 (17:17 IST)
ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன்னுடைய மகள், மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த தாய், தன்னுடைய மகளை கொன்ற சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியில் வசிப்பர் ரீமா(20). அவருக்கு காசியாபாத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது. 
 
இந்நிலையில், நேற்று ரீமாவின் தாய் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது ரீமா, அவர்களின் வீட்டில் குடியிருக்கும் ஒரு வாலிபருடம் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தார். தனது மகள் இன்னோரு வாலிபருடன் படுக்கையில் இருந்ததை கண்ட அவரின் தாய் அதிர்ச்சியைடந்தார். 
 
இதனிடையில், அவரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். விடிந்தால் இன்னொருவருடன் திருமணத்தை வைத்துக் கொண்டு, தன் மகள் செய்த காரியம் அவரை ஆத்திரமூட்டியது. இதனால் தலையணையை எடுத்து அவரது மகளின் முகத்தில் வைத்து மூச்சுத் திணறி இறக்கும் வரை அழுத்தியுள்ளார். இதனால் ரீமா இறந்து போனார்.
 
தன்னுடைய மகனுக்கு போன் செய்து வரவழைத்த ரீமாவின் தாய், வீட்டில் இருந்த உறவினர்களிடம், ரீமாவிற்கு மாரடைப்பு என்று கூறி, அவரின் உடலை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்களிடம் ரீமா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறியுள்ளனர்.
 
ஆனால், போலீசாரின் விசாரணையில், ரீமாவின் தாயும், அவரின் மகனும் கொலையை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :