வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (16:33 IST)

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கிக் கணக்கு - நரேந்திர மோடி மின்னஞ்சல்

நாடு முழுவதும் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும். இதில் எந்த ஒரு குடும்பமும் விடுபட்டுப் போகாமல் இருப்பதை வங்கி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வங்கி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இந்த மாபெரும் பணியை ஒரு மிகப் பெரிய பொறுப்பாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்றும் இதற்குத் தேசிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் அனைத்து வங்கி அலுவர்களுக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். 
 
சுதந்திர தின விழாவின் போது பிரதமர் ஆற்றிய உரையில் பிரதம மந்திரி வறியோருக்கும் வளம் திட்டம் (பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா) விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்ததை இன்று மீண்டும் உங்களுக்கு மின் அஞ்சல் மூலம் நினைவுபடுத்துகிறேன். நிதி சார்ந்த தேசிய அளவிலான இந்த இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கி வசதியும் வங்கிக் கணக்கும் இருக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் ரூபே பற்று வரவு அட்டை (டெபிட் கார்டு) மற்றும் ரூபாய் ஒரு லட்சம் வரை விபத்துக் காப்பீடும் வழங்கப்படும். 
 
இந்தப் பெருமை மிகு திட்டம், நாடு முழுவதும், 2014 ஆகஸ்டு 28ஆம் தேதி ஒரே நேரத்தில் தொடங்கப்படும். 
 
"நமது மேம்பாட்டுக்கு ஒன்றுபடுவோம் வளர்ச்சி அடைவோம்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் வறியோருக்கும் வளம் திட்டம் (ஜன் தன் யோஜனா) சேர்க்கப்பட்டுள்ளது. "இந்தக் குறிப்பிடத்தக்க தேசிய அளவிலான முயற்சியில் நீங்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்களுக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.