1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (14:47 IST)

மோடியின் கெடு அதானிக்கும், அம்பானிக்கும் பொருந்துமா?

கருப்புப் பணம் விவாகரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை மோடியின் நண்பரான அதானிக்கும், அம்பானிக்கும் பொருந்துமா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

 
ஞாயிறன்று மோடி ‘மன் கீ பாத்’ என்ற பெயரில் வானொலி உரை ஆற்றிய உரையில், ”கணக்கில் காட்டாத சொத்து, பணம் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே முன் வந்து விவரங்களை வெளியிட அரசு செப்டம்பர் 30ஆம் தேதியை இறுதிக் கெடுவாக நிர்ணயித்துள்ளது.
 
அபராதம் மட்டும் செலுத்துவதுடன் இந்த கணக்கில் வராத பணம் என்ற சுமையிலிருந்து வெளிவந்து விடலாம். கணக்கில் காட்டப்படாத வருவாயின் ஆதாரம் குறித்து எந்தவித கேள்வியும் விசாரணையும் இல்லை என்று நான் ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறேன்
 
எனவே வெளிப்படையாக இயங்குவதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு என்று இதனால்தான் நான் கூறி வருகிறேன். நாட்டு மக்களுக்கு நான் கூறுவது என்னவெனில் இந்த வாய்ப்பு செப்டம்பர் 30 ஆம்தேதி வரை உள்ளது. இதையே கடைசி வாய்ப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடியின் இந்த இறுதி எச்சரிக்கை, கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் கோடிகளை குவித்து வரும் ரிலையன்ஸ் அம்பானி, அதானி குழுமம் மற்றும் கடன் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ள அதிபர் விஜய் மல்லையாவிற்கு பொருந்துமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
ரிலையன்ஸ் (முகேஷ் குழுமம்) ரூ.1,87,070 கோடியும், ரிலையன்ஸ் அம்பானி - 1,21,000 கோடியும், அதானி குழுமம் - ரூ. 96,000 கோடியும் எஸ்ஸார் குழுமம்- ரூ. 1,01,461 கோடியும், ஜேபி குரூப் - ரூ. 75,000 கோடியும் லான்கோ குழுமம் - ரூ. 47,102 கோடியும், வீடியோகான் - ரூ. 45,400 கோடியும் வங்கிகளில் வாங்கிய கடன்கள்.
 
இந்த கார்ப்பரேட்டுகள் அனைத்தும் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர், முன்பிருந்ததை விட ஏராளமாக பலஆ யிரம் கோடி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளன. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் கார்ப்பரேட் நாட்டின் வளங்களை பயன்படுத்தி ஐடி துறையிலும், பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறையிலும் பல ஆயிரம் கோடி குவித்துள்ளது.
 
மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்துமதிப்பு இதுவரை எந்த அரசின் துறையினராலும் அறிய முடியவில்லை. அதானியின் கார்ப்பரேட் கம்பெனிகள் சுரங்கத் தொழிற்சாலைகள் மற்றும் கப்பல் துறைமுகம் ஆகியவற்றில் குவிக்கப்பட்ட வருவாய்க்கு எந்த கணக்கும் கிடையாது, எந்த வருமான வரியும் கிடையாது.
 
இவர்களுக்கு மோடியின் எச்சரிக்கை பொருந்துமா? என்று அவர்கள் வினா எழுப்பியுள்ளனர்.

நன்றி : தீக்கதிர்