கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… மோடியின் படத்தை நீக்கவேண்டும் – தேர்தல் ஆணையம் உத்தரவு!


தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸான் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5a மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறையாகும்.

ஏற்கனவே பெட்ரோல் பங்குகளில் இருக்கும் விளம்பரங்களில் மோடியின் புகைப்படத்தை நீக்க சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் இருக்கும் மோடியின் புகைப்படத்தையும் நீக்க இப்போது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது சம்மந்தமாக முன்னர் திருணாமூல் காங்கிரஸ் புகார் எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :