ஆடுகளை விற்று கழிவறை கட்டிய மூதாட்டி : காலில் விழுந்த மோடி


Murugan| Last Updated: திங்கள், 22 பிப்ரவரி 2016 (12:47 IST)
தூய்மை இந்தியா திட்டத்தை ஏற்று தன் வளர்த்து வந்த ஆடுகளை விற்று தன் வீட்டில் கழிவறை கட்டிய 104 வயது மூதாட்டியை பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார்.

 

 
சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் நகர்புற வசதிகளை ஊக்குவிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அப்போது தான் ஆசையாக வளர்த்த ஆடுகளை விற்று தன் வீட்டில் கழிவறை கட்டிய 104 வயது மூதாட்டியை மேடைக்கு வரவழைத்து பாராட்டி பேசினார்.
 
மேடையில் மோடி பேசும்போது “ கிராமத்தில் வசிக்கும் 104 வயதான இந்த மூதாட்டி தொலைக்காட்சி பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதில்லை. ஆனால் தூய்மை இந்தியா திட்டம் அவரை எப்படியோ சென்றடைந்திருக்கிறது. அதனால் ஆடுகளை விற்று கழிவறை கட்டியிருக்கிறார். மேலும், அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களையும் கழிவறை கட்டுவதை ஊக்குவித்து வருகிறார். அவரை நான் வணங்குகிறேன்” என்று கூறி அந்த மூதாட்டியின் காலில் விழுந்து  ஆசிர்வாதம் வாங்கினார் மோடி.


இதில் மேலும் படிக்கவும் :