8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்


Murugan| Last Modified வெள்ளி, 4 மார்ச் 2016 (19:57 IST)
எட்டு வயது சிறுமியை 15 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் ஏலூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் துணிக்கடையில் வேலை செய்கிறான். இவன் வீட்டிற்கு அருகில்  3ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி இருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவளை வீட்டிலேயே விட்டு விட்டு, அவளின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.
 
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த சிறுவன், சிறுமியை நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அந்த சிறுமிக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இந்த செய்தி அந்த பகுதி மக்களுக்கும் தெரிய வந்தது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த சிறுவனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்தனர். அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :