இந்தியாவில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாம்!..


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 22 அக்டோபர் 2015 (14:22 IST)
இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. சபை ஆய்வில் தெரிவித்துள்ளது.
 
 
ஆண், பெண் விகிதம் குறித்து ‘உலகின் பெண்கள்–2015’ என்ற தலைப்பில் ஐ.நா. சபை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா ஆகியவற்றில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்து உள்ளது.
 
அதிக மக்கள்தொகையை கொண்ட நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தான் உலகில் ஆண்கள் விகிதாச்சாரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
பொதுவாக இந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது.
 
உலகில் 3இல் ஒரு பங்கு குழந்தை திருமணம் இந்தியாவில் நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :