மோடியின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை - மாயாவதி

Lenin AK| Last Updated: வியாழன், 9 அக்டோபர் 2014 (19:16 IST)
பிரதமர் நரேந்திர மோடி இதுவரை தான் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
வரும் அக்டோபர் 15ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்னா சட்டமன்ற தொகுதியில், பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், முதலாளிகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் நன்கொடைகளை அளித்துவருகிறது என்றும் மஹாராஷ்டிராவில் உள்ள பிரதான கட்சிகள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் தனது கட்சி வார்த்தைகளை விட நடவடிக்கைகளையே நம்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :