1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 12 மார்ச் 2015 (14:27 IST)

”விசாரணையே இன்றி என்னை தூக்கில் போட வேண்டும்” - மார்கண்டேய கட்ஜூ

மாநிலங்களவையில் எனக்கு எதிராக தீர்மானம் நிறவேற்றினால் மட்டும் போதாது, விசாரணையே இன்றி என்னை தூக்கில் போட வேண்டும் என்று மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
 
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் [Blogspot] காந்தி குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
 

 
அதில், காந்தி பிரித்தாளும் சூழ்ச்சியையை பயண்படுத்திய பிரிட்டானிய அரசின் கொள்கையை அதிகப்படுத்தினார் என்றும் பகத்சிங், ராஜகுரு போன்ற புரட்சிவாதிகளின் நடவடிக்கையை மாற்றுவதற்காக ‘சத்தியாகிரகத்தை கொண்டு வந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும், காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிராக செயல்பட்டார் என்றும் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள் தனமானது. இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதனால் காந்தியை பிரிட்டனின் ஏஜெண்டாக செயல்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதனால் நேற்று, மாநிலங்களவையில் கட்ஜூவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்துள்ள கட்ஜு தன்னை தூக்கில் போடவேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதன் முழு வடிவம் கீழே:
"ஓ.. அற்புதமான செய்தி. மாநிலங்களை எனக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது! ஆனால் அது மட்டும் போதாது. நான் போலியாக தேசத்தந்தை என்று அழைக்கப்படும் ஒருவரைப் பற்றியும், ஜப்பானிய பாசிச சக்திகளின் ஏஜெண்டை பற்றியும் கருத்து தெரிவித்ததற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வெறூம் கண்டனம் தண்டனை ஆகாது.
 
நான் உச்சநீதிமன்ற நீதிபதி பதிவியிலிருந்து ஓய்வுபெற்று இருப்பதால், எனது சலுகைகளை பறிக்க வேண்டும் என்று சிலர் கூறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டி இருக்கும். 
 
நான் எளிமையான ஒன்றை செய்யலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு யோசனை கூறுகிறேன். [அவர்களுக்கு சிந்தனை பற்றாக்குறை இருப்பதால்] நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன், என்னை கைது செய்து, விசாரணையே இன்றி தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.