மருமகளின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்ட மாமியார் மற்றும் கணவர்


Dinesh| Last Modified செவ்வாய், 5 ஜூலை 2016 (10:04 IST)
மனைவியின் சித்ரவதை பொறுக்க முடியாமல் அவரின் கணவர் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.

 


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகர் கிஷன்புரத்தில் வசிப்பவர் ராமன் (30), இவருடைய மனைவி இவரையும் அவருடைய 50 வயதான தாய் த்ரிப்தி ராணியையும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த இருவரும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களுடைய உடல் ராம்நகர் ரெயில் நிலையத்தில் கண்டெடுக்கபட்டு, பிரேத பரிசோதனைக்காக சதார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :