இந்தியாவின் பெயரை மாற்ற சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு – பரபரப்பை கிளப்பிய நபர்!

Last Updated: சனி, 30 மே 2020 (07:53 IST)

இந்தியாவின் பெயரை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்றவேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

டில்லியை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் ‘இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்டது. இப்போதும் அதே பெயரில் அழைப்பது ஆங்கிலேய காலணிய ஆதிக்கத்தை நினைவூட்டுவதாக உள்ளது. அதனால் பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஜூன் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :