செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2025 (18:05 IST)

காதலியை வீடியோகால் மூலம் அழைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி அடைந்த காதலி..!

காதலியை வீடியோகால் மூலம் அழைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி அடைந்த காதலி..!
ஹரித்வாரில் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த 28 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
நவீன் என்ற இளைஞர், போட்டி தேர்வுகளுக்குத் தயாராவதற்காக நண்பரின் அறையில் தங்கியிருந்தார். நீண்ட நாட்களாக அவர் காதலித்து வந்த ஒரு பெண்ணுக்கும் அவருக்கும் ஏற்கனவே திருமணம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்தது.
 
இதனால் மனவருத்தம் அடைந்த நவீன், நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில், தனது காதலியுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கயிற்றை எடுத்து, மின்விசிறியில் தூக்கி மாட்டி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது காதலி அலறினார்.
 
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நவீனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
 
நவீனின் இந்த முடிவுக்கு பின்னால் ஏதேனும் சண்டை அல்லது மன அழுத்தம் இருந்ததா என்பது குறித்து பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 
Edited by Mahendran