மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்த தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

mamtha
மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்த தடை
siva| Last Updated: திங்கள், 12 ஏப்ரல் 2021 (20:57 IST)
மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10 ஆகிய நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 என இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் திடீரென மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற தடையால் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது பாஜக செய்த சதி என திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :