வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 23 ஜனவரி 2016 (18:29 IST)

சல்மான் கான் விடுதலைக்கு எதிர்ப்பு: மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு

மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து  விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,


 
அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.


 
 
கடந்த 2002ஆம் ஆண்டு மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் காரை தனது காரை ஓட்டி விபத்தி ஏற்படுத்தினார். இந்த விபத்தில் ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கிலிருந்து சல்மான் கானை கடந்த டிசம்பர் மாதம் விடுவித்தது.

இந்நிலையில், இவருடைய விடுதலையை எதிர்த்து, மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில்,  மும்பை உயர்நீதிமன்றம், அரசுத் தரப்பு சாட்சிகளையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ள தவறி விட்டதாகவும்,  சரியான கண்ணோட்டத்தில் வழக்கு நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
 
 
சல்மான் கானை விடுதலை வழங்கப்பட்ட தீர்ப்பில் 47 குறைகள் உள்ளதாகவும், விசாரணை நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் மகாராஷ்டிர அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.