பத்திரிக்கையாளர்களுக்கு இலவச கொரோனா சிகிச்சை! – மத்திய பிரதேசம் அறிவிப்பு!

Journalists
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 14 மே 2021 (13:06 IST)
சமீபத்தில் கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா சிகிச்சை இலவசம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பத்திரிக்கையாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு மத்திய பிரதேசத்தில் இலவச கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :