1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 4 ஜூலை 2014 (12:54 IST)

சமையல் எரிவாயு விலை ரூ.16.50 உயர்வு, 1 % நுகர்வோரை மட்டுமே பாதிக்கும்

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16.50 அதிகரிப்பு, 99 நுகர்வோரைப் பாதிக்காது என்றும் இந்த விலை உயர்வு, ஒரு சதவீதத்திற்கும் குறைவான நுகர்வோரை மட்டுமே பாதிக்கும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், மானியம் அல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ. 16.50 அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு ஜூன் 30 மற்றும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு மேலும் விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலை அதாவது மானியம் அல்லாத சிலிண்டர் விலை மேலும் ரூ.16.50 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள விலையைக் கருத்தில் கொண்டு இதற்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோர் 99 சதவீதத்திற்கும் கூடுதலாகும். இவர்களுக்கு எந்த விதத்திலும் இந்த விலை உயர்வால் பாதிப்பு இல்லை. இந்த விலை அதிகரிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவான நுகர்வோரை மட்டுமே பாதிக்கும் என்று பெட்ரோலிய அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.