வியாழன், 9 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2026 (10:30 IST)

5 கிலோ எடையுள்ள இலவச சிலிண்டர்.. மத்திய அரசு அறிவிப்பு.. பேச்சுலர்கள் நிம்மதி..!

5 கிலோ எடையுள்ள இலவச சிலிண்டர்.. மத்திய அரசு அறிவிப்பு.. பேச்சுலர்கள் நிம்மதி..!
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 5 கிலோ எடையுள்ள இலவச வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களிலும் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. 
 
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த 5 கிலோ சிலிண்டர்கள் சந்தை விலையில் கிடைக்கும். இதற்கு வீட்டு முகவரி சான்று தேவையில்லை; ஏதேனும் ஒரு செல்லுபடியாகும் அடையாள அட்டையை காண்பித்து சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். 
 
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL மற்றும் HPCL ஆகியவை எரிவாயு விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்துள்ளன. அதேசமயம், கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கான விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக ரீதியிலான விநியோகம் 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva