வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 1 மே 2017 (09:08 IST)

விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய விடையை மட்டும் எழுதாமல், அந்த கேள்விக்கு பொருந்தும் வகையில் காதல் கவிதைகளையும் சினிமா பாடல்களையும் எழுதிய பத்து மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



 


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற பகுதியில் உள்ள பால்குர்காட் என்ற சட்டக்கல்லூரியில் தற்போது 3வது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதை எழுதிய மாணவர்களில் சிலர், கேள்விக்குரிய விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பொருத்தமான இந்தி மற்றும் பெங்காலி பாடல்கள் மற்றும் காதல் கவிதைகளை எழுதியுள்ளனர்.

இந்த மாணவர்களின் விடைத்தால்களை திருத்திய ஆசிரியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அப்படி எழுதப்பட்ட விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து அந்த மாணவர்களை கட்டம் கட்டிய நிர்வாகம், இதற்கென ஒரு குழு அமைத்து விசாரணை செய்தது. அது உண்மை என தெரியவந்ததை அடுத்து, சுமார் 10 மாணவர்களை ஒரு வருடம் சஸ்பென்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். விடைத்தாளில் கவிதை எழுதியதற்கு ஒரு வருடம் சஸ்பெண்ட் என்பது டூமச் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.