வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (13:24 IST)

டெல்லி வேட்பாளரின் கையில் இருக்கும் பணம் வெறும் 100 ரூபாய்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,  டெல்லியை சேர்ந்த ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.100 மட்டும் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கிழக்கு டெல்லியை சேர்ந்த வேட்பாளரான ராமானுஜன் படேலின் சொத்து மதிப்பு ரூ.100 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

37 வயதான ராமானுஜன் படேல் முதுநிலை பட்டபடிப்பை முடித்துவிட்டு, பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது வேலையில்லாமல் இருக்கும் இவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே மிகவும் குறைந்த சொத்து மதிப்பை உடையவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் டெல்லி தொகுதியில் சமயக் பரிவர்தன் கட்சி சார்பில் போட்டியிடும் ராமானுஜனின் கையிருப்பு பணம் ரூ.100 மட்டும் தான் என தெரிகிறது.
 
இது குறித்து தெரிவித்த அவர், என்னிடம் வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட வங்கியில் கணக்கு துவங்க வேண்டுமென்பதால் 1000 ரூபாய் கடன் வாங்கி பாரத ஸ்டேட் வங்கியில்  கணக்கை துவங்கினேன்.
 
தேர்தலில் போட்டியிட செலுத்த வேண்டிய ரூ.25,000 டெபாசிட் பணத்தை எனக்காக 16 பேர் அளித்துள்ளனர் எனக் கூறினார்.