உணவு கொடுக்கச் சென்ற ஊழியரை கடித்து குதறிய சிங்கங்கள்

lions
Ilavarasan| Last Modified செவ்வாய், 10 மார்ச் 2015 (15:54 IST)
பெங்களூருவில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சிங்கங்களுக்கு உணவு வைக்கும் போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த சிங்கங்கள் அவரை கடித்துக் குதறின.
உயிரியல் பூங்காவில் விலங்குகளை பராமரிக்கும் வேலை செய்து வந்த கிருஷ்ணா (40), நேற்று ஆண் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு உணவு வைத்த போது, திடீரென கூண்டின் கதவை திறந்து கொண்டு வந்த சிங்கங்கள், கிருஷ்ணாவை கடித்துக் குதறின.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஊழியர்கள், சிங்கங்களை அடித்துவிரட்டி, கிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், பலத்த காயமடைந்து அதிக ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :