நிலத்தை தரமறுத்த பெண்ணை நிர்வாணமாக்கி தலைகீழாக தொங்கவிட்ட செல்வந்தர்கள்

woman hang upside down
Ilavarasan| Last Modified புதன், 29 ஏப்ரல் 2015 (13:42 IST)
உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள குத்தார-ஜட்டபூர் கிராமத்தை சேர்ந்த சில செல்வந்தர்கள் அந்த கிராமத்தை சேர்ந்த பிரிமா என்ற ஒரு நடுத்தர வயது உள்ள பெண்ணிடம் அவரது நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி தரக்கோரி வற்புறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை அடித்து உதைத்து துன்புறுத்தி அவரை நிர்வாணமாக்கி ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டனர்.
அதன் பிறகு தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றார். செல்வந்தர்களின் செல்வாக்கால் அந்த பெண்ணின் புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர், அந்த பெண்ணை அவமானபடுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் மனம் உடைந்த அந்த பெண் இறுதியாக பல்ராம்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் சென்று முறையிட்டார்.

உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இது குறித்து துளசிபூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் எஸ்.கே ராய் மற்றும் துணை ஆய்வாளர் அலோக் குமார் சிங் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதோடு பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.டி.சுக்லா கூறியதாவது, புகார் கொடுக்க செல்லும் போது அந்த பெண்ணை தள்ளிவிடவில்லை. நாங்கள் வாஜித் அலி, சாஜித் அலி, மொகமத் முத்வில், மொகமத் முத்லப், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல்.பி. யாதவ் சம்பவ இடத்தில் ஆரமப கட்ட விசாரணை நடத்தியுள்ளார். பிரிமா கூறிய குற்றசாட்டுகள் உண்மை என தெரியவந்துள்ளது. மண்டல அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார் என்று கூறினார்.
இந்த பெண் மீது தாக்குதல் நடப்பது இது முதல் முறையல்ல. 2 மாதத்திற்கு முன்
இந்தபெண்ணை அடித்து உதைத்துள்ளனர். அவரது மகனையும் ஊரை விட்டு ஓடி விடுமாறு மிரட்டினர். தற்போது அவரது மகன் அவரோடு இல்லை.

இது என்னுடைய நிலம் அதை என்னிடம் இருந்து பறிக்க முடியாது நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தற்போது எனது நிலத்தை அபகரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது என அந்த பெண் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :