நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து நிதிஷ்குமார் உண்ணாவிரதம்

Nitish Kumar
Suresh| Last Modified சனி, 14 மார்ச் 2015 (12:40 IST)
நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை வந்த நிதிஷ் குமார், அங்கு யோகா பயிற்சியை மேற்கொண்டார்.

பிறகு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும், அதை உடனே திரும்பப்பெறவேண்டும என்பதை வலியுறுத்தியும் பாட்னாவிலுள்ள, கட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அவருடன் கட்சியின் மூத்த தலைவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் 24 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :