வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (15:51 IST)

தம்பிக்கு வயது இருபத்தி ஆறு, அண்ணனுக்கு இருபத்தி ஐந்தா? : லாலு செய்த காமெடி

நடக்க இருக்கும், பீகார் சட்ட மன்றத்தேர்தலில் தன் மகன்களை களமிறக்கும் லாலு பிரசாத், அவர்களுடைய வேட்பு மனுக்களில் வயதை தவறாக குறிப்பிட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
லாலு பிரசாத் யாதவ், வருகிற பீகார் சட்ட மன்றத் தேர்தலில், தனது மகன்களை களமிறக்க உள்ளார். அதற்காக வேட்பு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.  அதில், மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் மனுவில் அவர் வயது 25 என்று குறிப்பிட்டிருந்தது. அவரின் தம்பி தேஜஸ்வி யாதவின் மனுவில் அவரின் வயது 26 என்று இருந்தது.
 
இந்த தகவல் வெளியானதும், இதனைப் பற்றி லாலுவோ அல்லது அவரது மகன்களோ இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் இது பற்றி கூறியபோது, தேஜ் பிரதாப் அவரின் தம்பியை விட 2 வயது முத்தவர். இந்த தவறு எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. அவர்களின் மனுக்களை நிரப்புவதற்கு உதவி செய்தவர்களும் இதை கவனிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
 
இது பற்றி கருத்துக்கூறிய தேர்தல் அதிகாரி, வேட்பு மனுவை பெறும் அதிகாரி மனு சரியாக நிரப்பப்பட்டிருக்கிறதா என்றுதான்  பார்ப்பார். அதிலுள்ள தகவல்கள் சரியானதுதானா என்றெல்லாம் பார்க்க மாட்டார் என்று கூறினார்.
 
எனினும், இந்த காரணத்திற்காக லல்லு பிரசாத்தின் மகன்களின் மனுக்கள் நிராகரிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது எதிர்கட்சிகளின் சதி என்று லல்லு பிரசாத் சொல்லாமல் இருந்தால் சரி.