என்னுடைய கடைசி குட்மார்னிங்: இறப்பை முன்கூட்டிய கணித்த பெண் டாக்டர்

doctor
siva| Last Updated: புதன், 21 ஏப்ரல் 2021 (19:32 IST)
doctor
மும்பையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தன்னுடைய இறப்பை முன்கூட்டியே கணித்து தன்னுடைய கடைசி குட் மார்னிங் என பேஸ்புக்கில் பதிவுசெய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மும்பையைச் சேர்ந்த பெண் டாக்டர் மனிஷா ஜாதவ் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரசு தன்னுடைய உடல் நாளுக்கு நாள் மோசமாகி வருவதை அறிந்த அவர் விரைவில் தான் இறந்து விடுவோம் என்று அவருக்குத் தெரிந்துவிட்டது

இதனை அடுத்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுதான் எனது கடைசி குட்மார்னிங் என்று பதிவு செய்தார். இந்த பதிவு செய்த 36 மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அவர் தனது பேஸ்புக் பதிவில் எனது உடல் தான் அழியுமே தவிர ஆத்மா அழியாது என்றும், ஆத்மாவுக்கு என்றுமே அழிவு இருக்காது என்றும், இருப்பினும் அனைவரும் கவனமாக இருங்கள் என்று பதிவு செய்திருந்தார் இந்த பதிவு அனைவரின் கண்களை குளமாக்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :