1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. lady conductor passed way in bus accident in telungana

ஓடும் பேருந்தில் தகராறு! - பெண் பயணி எட்டி உடைத்ததில் நடத்துனர் மரணம்...

lady conductor
என்னதான் பெண்கள் ஒரு பக்கம் வளர்ந்து ஆண்களுக்கு நிகரான பணிகளை செய்ய தொடங்கி பாராட்டை பெற்று வந்தாலும் ஒரு பக்கம் பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக இருப்பதும் தொடர்ந்து வருகிறது.

சமீப காலமாகவே அரசின் பேருந்து துறைகளில் பெண்கள் ஏராளமான பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக நிறைய பெண் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் வந்து விட்டனர்.
இந்நிலையில் தெலுங்கானாவில் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்தவர் பிரவலிகா(24)..

சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட வாய் தகராறில் மௌனிகா என்கிற பெண் பயணி எட்டி உதைத்ததில் நடத்துனர் பிரவலிகா ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து பயணி மௌனிகா மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் நடத்துனரை பெண் பயணியே எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தவெக ஆட்சியை கவிழ்க்க 15 கோடி பேரம் பேசினாங்க! - தவெக எம்.எல்.ஏ முஸ்தபா ஓப்பன் பேட்டி