வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 2 மே 2016 (12:22 IST)

பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு: பேருந்தில் பிறந்த குழந்தை

பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு

பிரசவ வலியுடன் வந்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸை தர மறுத்ததால், அவர் பேருந்தில பிரசவித்தார். இது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க காஷ்மீர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிஷா தேவி. இவரை பிரசவ வலியுடன் அவரது குடும்பத்தார் இங்கிருந்த மாவட்ட அரசு துணை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜம்மு நகரில் உள்ள ஸ்ரீ மஹாராஜா குலாப் சிங் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.
 
இந்நிலையில், நிஷா தேவி பொதுவாகனத்தில் செல்ல இயலாது என்றும் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்து உதவி செய்யுங்கள் எனவும் அவரது கணவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.
 
ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸை வழங்க  சம்மதிக்கவில்லை. இதனால், இந்த வழியாக ஜம்மு நகரை நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில் கர்ப்பிணி நிஷாவை ஏற்றிச் சென்றனர்.
 
அப்போது, கடுமையான வலியால் அவதிப்பட்டார். அந்த பேருந்தில் வந்த ஒரு ஆண் மருந்தாளுநர் இதைப் பார்த்து, தாமாகவே முன்வந்து நிஷா பிரசவிக்க உதவி செய்தார். அவருக்கு சுகப்பிரசவம் நடந்து.
 
இந்நிலையில்,  தங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இருந்தும் பிரசவ வலியுடன் வந்த கர்ப்பினியை காப்பாற்ற தவறிய ஜம்மு மாவட்ட அரசு துணை மருத்துவமனை நிர்வாகத்தின்மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு இருநபர் கமிட்டியை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
மருத்துவர்களின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.