கோஹினூர் வைரம் திருடப்படவில்லை; பரிசாக அளிக்கப்பட்டது - மத்திய அரசு பதில்


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (09:09 IST)
வைரம் திருடப்படவோ வலுக்கட்டாயமாக பறிக்கப்படவோ இல்லை. கிழக்கு இந்திய கம்பெனியிடம் ரஞ்சித் சிங்கலால் ராஜாவால் பரிசாக கொடுக்கப்பட்டது என்று மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
 
இந்தியாவின் புகழ் பெற்ற கோஹினூர் வைரம் 800 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வெட்டி எடுக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய வெட்டு வைரங்களில் ஒன்றாக கோஹினூர் கருதப்படும் நிலையில் ஆங்கிலேயரின் அட்சியின்போது ரஞ்சித் சிங்கலால் என்ற ராஜா அதை இங்கிலாந்து ராணி விக்டோரியாவுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
 
தற்போது அந்த வைரம் எலிசபெத் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக உள்ளது. மேலும் இந்தியாவுடன் பாகிஸ்தானும் இந்த வைரத்திற்கு சொந்தம் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்தியாவில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை இந்தியாவிடமே ஒப்படைக்க இங்கிலாந்து தூதரகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சமூக நீதி முன்னணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசமும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பொதுநல மனுவை விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் நிலைபாடு குறித்தும் பங்கை கோறுவது எதிர்காலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றது. மேலும் இதுகுறித்து 6 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருந்தது.
 
இந்நிலையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கருத்தில் இந்தியா கோஹினூர் வைத்தை திரும்ப கோராது. வைரம் திருடப்படவோ வலுக்கட்டாயமாக பறிக்கப்படவோ இல்லை. கிழக்கு இந்திய கம்பெனியிடம் ரஞ்சித் சிங்கலால் ராஜாவால் பரிசாக கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்பட்டுள்ளது என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.
 
இவ்வழக்கில் அங்கம் வகிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இவ்விவகாரத்தில் பதில் அளிக்க உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :