ராகுலுக்கு குச்சிமிட்டாய்; அப்போ மோடிக்கு?: குஷ்புவின் நக்கல் டுவீட்!

ராகுலுக்கு குச்சிமிட்டாய்; அப்போ மோடிக்கு?: குஷ்புவின் நக்கல் டுவீட்!


Caston| Last Updated: ஞாயிறு, 13 நவம்பர் 2016 (11:25 IST)
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குறித்து நக்கலாக டுவீட் செய்தவருக்கு அதே நக்கல் பாணியில் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பதில் டுவீட் செய்து அசத்தியுள்ளார்.

 
 
வர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தனக்காக சாக்லேட்டுகள், வீடியோ கேம்கள் வாங்க வேண்டும் என நக்கலாக பதிவிட்டு அதில், ராகுல் காந்தி, குஷ்பு ஆகியோரின் டுவிட்டர் பக்கங்களையும் குறிப்பிட்டிருந்தார்.


 

 
இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு நமது பிரதமருக்கு பறப்பது மிகவும் பிடிக்கும் எனவே அவருக்கு பொம்மை விமானம் வங்குவதாக உறுதியளியுங்கள் அதன் பின்னர் சாக்லேட் வாங்கலாம் என அதிரடியாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :