வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (10:12 IST)

காய்கறிகளுக்கு அடிப்படை விலை – நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு அறிவிப்பு!

கேரளாவில் 16 வகையான காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது அம்மாநில அரசு.

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில், காய்கறிகளுக்கு அடிப்படை விலையை அம்மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 16 வகையான காய்கறிகள். இந்த திட்டம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் அவதிப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது மாநில அரசு.

உற்பத்தி செலவை விட அடிப்படை விலை 20% அதிகம் இருக்கும் என் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகளின் விலை சரிந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறிகள் வாங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.