தொடர்புடைய செய்திகள்
- விஜயை பார்க்க கேரளாவிலிருந்து நடந்தே வந்த தம்பதி!.. சந்திப்பாரா முதல்வர்?..
- மரண தண்டனையை தடுத்து நிறுத்திய மனித நேயம்!.. கேரள நபர் மீட்பு!...
- ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..
- முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து.. அதற்கு பதிலாக டெல்லி செல்கிறார்.. பிரதமருடன் சந்திப்பா?
- கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் நாளை பதவி ஏற்பு: ராகுல் காந்தி, விஜய் பங்கேற்பு!
கேரளா முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் தொடக்கம்: தமிழ்நாட்டில் எப்போது?
கேரள சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியின்படி, மாநிலம் முழுவதும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் சாத்தியமாகியுள்ளது. திருவனந்தபுரம் தம்பானூர் கே.எஸ்.ஆர்.டி.சி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், 'பிரியதர்ஷினி' என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தை அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் 'ஜீரோ டிக்கெட்' வழங்கி முறைப்படி தொடங்கி வைத்தார்.
வரலாற்று சிறப்புமிக்க பொது போக்குவரத்து தொடக்க இடத்தில் இந்த திட்டம் அமைந்திருப்பது பெருமைக்குரியது என குறிப்பிட்ட முதல்வர், இதன் மூலம் மீனவ பெண்கள், மாணவிகள், உழைக்கும் மகளிர் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட பல தரப்பினரின் மாதாந்திர பயணச்செலவு மிச்சமாகி குடும்ப சேமிப்பாக மாறும் என்றார்.
இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்கிறது. தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பில்லாமல் பொது போக்குவரத்தை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும், இது பெண்களுக்கு அரசு அளிக்கும் ஆகச்சிறந்த கௌரவம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
Edited by Siva
