வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (16:24 IST)

பதவியை ராஜினாமா செய்தார் கேரள ஆளுநர் ஷீலா தீட்சித்

கேரள ஆளுநர் ஷீலா தீட்சித் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டும், நீக்கப்பட்டும் வருகிறார்கள். சில ஆளுநர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த சங்கர நாராயணன் மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஆளுநர் பதவியை சங்கர நாராயணன் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கேரள ஆளுநராக உள்ள டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் பின்னர் மாலையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து ஷீலா தீட்சித் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.