தொடர்புடைய செய்திகள்
- இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. கேரளாவுக்கு செல்ல முயன்ற இளம்பெண்ணை சரியான நேரத்தில் காப்பாற்றிய சிங்கப்பெண் படை...
- புதுச்சேரியிலும் தொடரும் காங்கிரஸ் - தவெக கூட்டணி: அடுத்தது கேரளா, ஆந்திரா , கர்நாடகாவா?
- கேரளா முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் தொடக்கம்: தமிழ்நாட்டில் எப்போது?
- விஜயை பார்க்க கேரளாவிலிருந்து நடந்தே வந்த தம்பதி!.. சந்திப்பாரா முதல்வர்?..
- மரண தண்டனையை தடுத்து நிறுத்திய மனித நேயம்!.. கேரள நபர் மீட்பு!...
அந்தரங்க உறுப்பில் போதை மருந்து கடத்திய 2 பெண்கள்.. 88 கிராம் போதைப்பொருள் பறிமுதல்..
கேரள மாநிலம் திருச்சூரில் 308 கிராம் எம்.டி.எம்.ஏ என்ற வீரியமிக்க போதைப்பொருளை கடத்திய வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சூர் மாவட்டத்தின் சமீபத்திய மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் இதுவும் ஒன்றாகும். வாணியம்பாறை பகுதியில் போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது, பாலக்காட்டில் இருந்து திருச்சூர் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை மறித்துச் சோதனையிட்டனர்.
அப்போது காரில் இருந்த ஒரு பெண்ணின் ரகசிய உறுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிராம் போதைப்பொருள் முதற்கட்டமாகக் கைப்பற்றப்பட்டது. காரில் இருந்த ஷிஃபாஸ், வித்யா, ஜிஷ்ணு மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய நால்வர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, ஷிஃபாஸ் என்பவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி மேலும் 18 கிராம் எம்.டி.எம்.ஏ-வைப் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக, சாவக்காடு பகுதியில் உள்ள ஒரு அலுமினியப் பட்டறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 288 கிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய ஷபீர், அன்ஷாத் மற்றும் சுமேஷ் ஆகிய மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளின் மொபைல் போன் ஆதாரங்கள் மூலம் இந்த ஒட்டுமொத்த போதைப்பொருள் கும்பலையும் போலீஸார் கூண்டோடு பிடித்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
