1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kerala CM Condemns Attacks on Christmas Carol Groups and Minority Rights

பள்ளி மாணவர்கள் கரோல் பாடி சென்றபோது தாக்குதல்.. சங்பரிவார் காரணம் என பினராயி விஜயன் குற்றச்சாட்டு..!

பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன், பாலக்காட்டில் பள்ளி மாணவர்கள் கரோல் பாடி சென்றபோது அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இச்சம்பவம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்றும், இதன் பின்னணியில் சங்கப்பரிவார் அமைப்புகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வன்முறை தொடர்பாக அஸ்வின் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த விவகாரத்தில், கரோல் பாடி சென்றவர்கள் மது அருந்தியிருந்ததாக பாஜக மாநில பொதுச்செயலாளர் சி. கிருஷ்ணகுமார் கூறியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களின் பெற்றோர்கள் இக்குற்றச்சாட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய முதல்வர், கேரளாவில் மத பாகுபாட்டை தூண்டும் சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 
 
தபால் நிலையங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் கொண்டாட்டங்களை தடுக்க முயலும் அமைப்புகள் குறித்தும் விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் கட்சி தான் கிறிஸ்துமஸ் கேக்: திமுக - தவெக இடையே சண்டை குறித்து அண்ணாமலை விமர்சனம்