தொடர்புடைய செய்திகள்
- ஹார்முஸ் ஜலசந்தி முடங்கும் அபாயம்.. ரணகளமான பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 1650 புள்ளிகள் சரிவு..!
- 4 ஆயிரம் கி.மீ தூரத்திலிருந்து ஏவுகணை வீசிய ஈரான்!.. மிரண்டு போன அமெரிக்கா!...
- எரிபொருள் தட்டுப்பாடு!.. வாட்டர் கேன் விலை உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி!..
- ஒரே மாசத்தில் 282 லட்சம் கோடி இழப்பு!.. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போரால் பங்கு சந்தை பாதிப்பு!..
- ஈரானை நோக்கி விரைவில் அமெரிக்காவின் 2000 கடற்படை வீரர்கள்.. ஏதோ பெரிய தாக்குதல் இருக்குது..!
ஈரானுக்கு உதவும் இந்திய மக்கள்.. கணவர் கட்டிய தாலியை தானமாக கொடுத்த பெண்..!
ஈரான் மீது தொடுக்கப்பட்டுள்ள போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில், இந்தியாவிலிருந்து, குறிப்பாகக் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து தங்கம், பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிதியுதவியாக குவிகின்றன.
இதில் 28 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது கணவரின் நினைவாக போற்றி பாதுகாத்து வந்த தங்க நகைகளை, ஈரானிய பெண்களுக்கு உதவும் நோக்கில் காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண் தானமாக வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.
புத்காம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்களின் சேமிப்புப் பணம், செப்பு பாத்திரங்கள் மற்றும் கால்நடைகளை கூட நிதியுதவியாக அளித்து வருகின்றனர்.
"ஈரான் மீது திணிக்கப்பட்ட சட்டவிரோத போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுவதே எங்களது நோக்கம்" எனப் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம், இந்திய மக்களின் இந்த ஈடுஇணையற்ற அன்பிற்கும் தியாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளது. வங்கி பரிவர்த்தனைகளில் சில சிக்கல்கள் இருப்பதால், நேரடி பங்களிப்புகள் மூலம் இந்த மனிதாபிமான உதவி தொடர்கிறது. இது இந்தியா மற்றும் ஈரான் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்று உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Edited by Siva
