முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!
காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, தியாகிகள் நினைவு சின்னத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த முயன்றதாகவும், ஆனால் காவலர்கள் அவரை தடுத்ததை அடுத்து அவர் சுவர் ஏறி குதித்து சென்றபோது அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரில் தியாகிகள் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்த முதல்வர் உமர் அப்துல்லா திட்டமிட்டிருந்த நிலையில், அவர் திடீரென வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அவர் நினைவிடத்திற்கு செல்ல முயற்சி செய்தபோது காவலர்கள் அவரைத் தடுத்தனர். இதனை அடுத்து அவர் தனது வீட்டின் சுவர் ஏறி குதித்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் சுவர் ஏறி குதிப்பதை பார்த்ததும் செய்வதறியாது காவலர்களும், உயர் அதிகாரிகளும் திகைத்து நின்றனர்.
"சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே என்னை தடுத்ததாக கூறுகிறார்கள். எந்த சட்டத்தின் கீழ் நான் தடுக்கப்பட்டேன் என்று எனக்குத் தெரிவிக்க வேண்டும். இது சுதந்திர நாடு என்று கூறுகிறார்கள், ஆனால் இன்னும் அடிமையாகவே இருக்கிறோம். இன்னும் எத்தனை நாளைக்கு இதேபோன்று தடுக்க முடியும்?" என காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran