மோடியின் விளக்கு ஏற்றும் திட்டம் – தமிழ் இயக்குனரின் கிண்டல் டிவீட் !

modi
Last Modified ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (18:33 IST)

இன்று இரவு மோடி சொல்லியுள்ள விளக்கு ஏற்றும் திட்டத்தினை தான் நிராகரிப்பதாக கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 12 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர்பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் 5ம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்தார். ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மோடியின் இந்த முடிவுக்கு ஆதரவுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகரான கரு பழனியப்பன் ‘இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நான் நிராகரிக்கிறேன் ! நீங்க..? இரண்டு வைரஸ்களையும் அறிவியல் மற்றும் அறிவின் துணை கொண்டு வெல்வோம்' என கேலி செய்யும் விதமாக டிவீட்டைப் பகிர்ந்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :