1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Karnataka Suspends Food Licences Over Online Sale of Toxic Datura Fruits and Seeds

நச்சு பழங்கள், விதை விற்பனை.. அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உரிமங்கள் ரத்து.. அதிரடி நடவடிக்கை..

ஊமத்தங்காய்
நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் பழங்கள் மற்றும் விதைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ததாக கூறி, முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்களின் உணவு பாதுகாப்பு உரிமங்கள் மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தை விதைகள் மற்றும் பழங்கள் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
 
அதிகாரிகளின் உத்தரவின்படி, ஊமத்தங்காய் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம், விற்பனை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.
 
இதற்கிடையே, பிக்பாஸ்கட் நிறுவனம் ஊமத்தங்காய் விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட பொருட்களின் பாக்கெட்டுகளில் உட்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.
 
மேலும், ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஊமத்தங்காய் பொருட்களை விநியோகம் செய்த மொத்த விற்பனையாளர்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரகசியமாக ரஷ்யாவுக்கு சென்ற சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப்.. மாஸ்கோவில் நடந்தது என்ன?