பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு


Murugan| Last Modified செவ்வாய், 22 நவம்பர் 2016 (17:08 IST)
வயோதிகம் காரணமாக, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று உயிரிழந்தார்.

 

 
அவருக்கு வயது 86. இவர் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர் ஆவார். சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள  வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
 
இவர் பத்ம விபூஷன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
 
மேலும், சிறந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளை 2 முறை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் அவர் பாடிய ’ஒரு நாள் போதுமா’ மற்றும் ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்.. போன்ற பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.

7 வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடத் தொடங்கிய அவர், இசையில் புது புது ராகங்களை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இழப்பு, இசைத் துறையின் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :