வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (19:14 IST)

தலையணை, படுக்கையில் பல கோடி ரூபாய் ஊழல்; பாஜகவிற்கு அடுத்த சோதனை

கர்நாடகத்தில் மாணவ விடுதிகளுக்கு வழங்கப்படும் தலையணை, படுக்கை கொள்முதல் பல கோடி ரூபாய் ஊழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
 

 
மாணவர் விடுதிகளுக்கு தலையணை, படுக்கை கொள்முதல் செய்ததில் 14 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் உள்ள அரசு மாணவர் விடுதிகளை சமூக நலத்துறை நடத்தி வருகிறது.
 
இங்கு தங்கியிருக்கும் மாணவர்களுக்காக தலையணை, படுக்கைகள் வாங்கப்பட்டன. ஒரு படுக்கைக்கு ரூ.1750 வீதம் 21 ஆயிரத்து 971 படுக்கைகளும், ஒரு தலையணை தலா ரூ.196 வீதம் 18 ஆயிரத்து 717 தலையணைகளும் என ரூ.4.93கோடிக்கு வாங்குவதாகசென்ற ஆண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 
ஆனால் அதிகப்படியான விலை நிர்ணயிக்கப்பட்டு ரூ.9.13 கோடிக்கு பொருட்கள் வாங்கப்பட்டன. இந்த வகையில் 4.3 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதே போன்று 3 ஆண்டுகளுக்கு ஊழல் நடந்ததால் அரசுக்கு 14 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.