கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் மரணம்


Caston| Last Updated: சனி, 30 ஜூலை 2016 (16:48 IST)
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 39. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸலசில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 
 
நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்த ராகேஷ் சில தினங்களுக்கு முன்னர் திடீர் உடல் நலக்குறைவால் பெல்ஜியம் நாட்டிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
உடல் நிலை நாளுக்கு நாள் மோசமான நிலையில், கடந்த வியாழக்கிழமை, கர்நாடக முதல்வர் சித்தராமையா பெல்ஜியம் புறப்பட்டு சென்றிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராகேஷ் இன்று உயிரிழந்தார்.
 
சித்தராமையாவுக்கு ராகேஷ், யோகேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். கன்னட திரைப்படம் ஒன்றிலும் ராகேஷ் நடித்திருந்தார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :