வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:15 IST)

’மேகதாதுவில் அணை கட்ட அனுமதியுங்கள்’: பிரதமர் மோடியிடம் சித்தராமையா கோரிக்கை!

டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்தார். சித்தராமையாவுடன் எடியூரப்பா, அனந்தகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பிரதமரை சந்திக்க சென்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
 

 
பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தருமாறு பிரதமரிடம் கோரியதாக தெரிவித்தார். தங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக மோடி பதிலளித்ததாக சித்தராமையா கூறினார். கர்நாடகா மாநிலம் காவிரியில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறிய சித்தராமையா, தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
 
மேலும் பேசிய அவர் கர்நாடகாவிற்கு உட்பட்ட பகுதியில்தான் அணைக் கட்டுவதாக விளக்கமளித்தார். தங்களது எல்லையில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அதிகாரமுள்ளதாகவும் கூறினார். அணை விவகாரத்தை தமிழக கட்சிகள் அரசியலாக்குவதாக சித்தராமையா புகார் கூறினார்.