வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2016 (16:24 IST)

தமிழர்கள் வெளியேறியதால் பாதிப்படைந்த கர்நாடகா

தமிழர்கள் வெளியேறியதால் கர்நடகாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் ஆட்கள் கிடைக்காமல் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.


 

 
பெங்களூர் நகரில் நடந்த கலவரத்தில், ஏராளமான தமிழர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். சுமார் 10 லட்சத்துக்கு மேலான தமிழர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
 
இதனால் கட்டுமான தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த தமிழர்களும் இல்லாததால், பெங்களூர் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பிணங்கள் கிடக்கின்றன.
 
மேலும் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் இல்லாததால் அதிக அளவில் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.