வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (12:36 IST)

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எச்சரிக்கை : மிரட்டும் கன்னட அமைப்பினர்

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எச்சரிக்கை : மிரட்டும் கன்னட அமைப்பினர்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள், அங்கு வாழும் தமிழர்களை எச்சரித்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று அங்கு முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. நடுரோட்டில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து கார்நாடகா செல்லும் அனைத்தும் வாகனங்களும், ஒசூரிலேயே நிறுத்தப்பட்டன. அதேபோல், கர்நாடகாவிலிருந்தும் எந்த வாகனமும் தமிழகத்திற்கு செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் குதித்துள்ள கன்னட அமைப்புகள், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், தங்களுக்கு ஆதவராக இருக்க வேண்டும். இல்லையெனில், தமிழர்களின் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் புகுந்து தாக்குதல் நடத்துவோம். 1991ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளன.

இந்த எச்சரிக்கை அங்கு வாழும் தமிழர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.