தொடர்புடைய செய்திகள்
- 50 லட்சம் ரூபாய் சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு எழுத்து துறைக்கு வந்த இளம்பெண்.. அதன்பின் என்ன நடந்தது?
- வேலை செய்யாமல் எப்படி சம்பளம் வாங்குவது.. ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி.. முதல் நாளே தோப்புக்கரணம் போட்டு வைரலானவர்..
- திருமணமான ஒருவர் இன்னொரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருந்தால் குற்றமில்லை: நீதிமன்றம்
- ஒன்று இரண்டல்ல, எனக்கு 5000 காதலிகள் உள்ளனர்..அமைச்சரின் சர்ச்சை பேச்சால் பரபரப்ப்பு..!
- முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்? பாஜகவுக்கு முதல்வர் பதவியா?
கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக எழுந்த புகார்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா..!
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, பண விவகார சர்ச்சையில் சிக்கியதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அவர் மீது உள்விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். தனது கடிதத்தில், ஆழ்ந்த மனவேதனையுடன் இந்த முடிவை எடுப்பதாகவும், உடனடியாக பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வர்மா தங்கியிருந்த இடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பணக்கட்டுகள் மீட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்திருந்தார்.
இந்த விசாரணை குழுவிற்கு எதிராக நீதிபதி வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் சட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி அவரது மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பதவி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்த சூழலில், அவர் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்திருப்பது நீதித்துறை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Edited by Siva
