கோமாவில் சிகிச்சை பெற்ற நோயாளியை அடித்து துன்புறுத்தும் மருத்துவர்

நோயாளியை அடிக்கும் மருத்துவர்
லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 14 மார்ச் 2015 (14:14 IST)
நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியை, மருத்துவர் ஒருவர் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ
பல்கலைக்கழகத்தில் தாகீத் அகமது என்ற ஜூனியர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அந்த மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டாக்டர் தாகீத் அகமது சக மருத்துவர்களுடன் சேர்ந்து நினைவிழந்த நோயாளி ஒருவரை தாக்குகிறார். நினைவிழந்த நோயாளியை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வருவதற்காக அவ்வாறு தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்கப்பட்ட இந்த சம்பவத்தை நோயாளி ஒருவர் அதே வார்டில் இருந்த ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்கலைகழக துணை வேந்தர் ரவிகாந்த் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நோயாளியை அடித்த ஜுனியர் மருத்துவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :