வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 மே 2016 (13:41 IST)

தேசிய கீதம் அவமதிப்பு - ராணுவ நிகழ்ச்சியில் 2 பத்திரிக்கையாளர்கள் வெளியேற்றம்

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியின்போது, தேசிய கீதத்தை அவமதித்ததாக பத்திரிகையாளர்கள் 2 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
 

 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ராணுவப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் மூத்தபிடிபி தலைவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான செய்யது பஷாரத் அகமது கலந்து கொண்டார்.
 
நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் 2 பேர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
 
வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவரான ‘காஷ்மீர் ரீடர்’ செய்தியாளர் ஜூனைத் பஸாஸ் கூறுகையில், நிகழ்ச்சி குறித்து செய்திசேகரிக்கத் தான் ராணுவம் எங்களை அழைத்தது; தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நான் செய்திக்கு குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்; தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகுஎன்னிடம் வந்த கர்னல் பர்ன், நான் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகக் கூறி அங்கிருந்து வெளியேறச் சொன்னார் என்று தெரிவித்தார்.
 
ஜூனைத் பஸாஸூடன் சேர்த்து வெளியேற்றப்பட்ட மற்றொரு பத்திரிகையாளர் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையைச் சேர்ந்தவர்.